'காதலிக்க நேரமில்லை' படத்தில் இருந்து வெளியான ஜெயம் ரவியின் Muevelo வீடியோ பாடல்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் ஒன்று காதலிக்க நேரமில்லை. தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற Muevelo பாடல் வெளியாகி உள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. ரவி மோகன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, தோல்வியை தழுவிய இந்த படத்தில் இடம்பெற்ற, Muevelo என்கிற வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.