
watch : பேஷன் ஷோவில் ஜிமிக்கி பொண்ணாக வலம் வந்த ராஷ்மிகாவின் கியூட்டான ரேம்ப் வாக் வீடியோ
மும்பையில் நடந்த பேஷன் ஷோவில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, அதில் ரேம்ப் வாக் வந்து அனைவரையும் அசர வைத்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. இதையடுத்து பாலிவுட்டில் பிசியான அவர் அங்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆகி அங்கு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் மும்பையிலேயே வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்ட ராஷ்மிகா, அண்மையில் மும்பையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொண்டார். இந்த பேஷன் ஷோவில் கெத்தாக காரில் வந்து இறங்கிய ராஷ்மிகா மந்தனா. ஜிகு ஜிகு உடையில் ஸ்டைலாக ரேம்ப் வாக் நடந்து வந்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.