Asianet News TamilAsianet News Tamil

Dhanush D51: தனுஷுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா!

நடிகர் தனுஷின் 51-ஆவது படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

First Published Aug 15, 2023, 1:17 PM IST | Last Updated Aug 15, 2023, 1:17 PM IST

நடிகர் தனுஷ் தற்போது தன்னுடைய 50-ஆவது படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை அவரே இயக்கி - நடிக்க உள்ளார். வடசென்னை பகுதியில் நடிக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக உள்ளது. 

இதை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர் சேகர் காமுல்லா இயக்கத்தில் தன்னுடைய 51-ஆவது படத்தி நடிக்க உள்ளார். சமீபத்தில் இப்படம் குறித்த அறிவிப்பு அதிகார பூர்வமாக வெளியான நிலையில், அடுத்தடுத்து இப்படம் குறித்த, தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், தனுஷ் நடிக்கும் 51-ஆவது படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Video Top Stories