Animal Trailer: அப்பா மீது வெறித்தனமான பாசத்தை பொழியும் மகனாக ரன்பீர் கபூர்! வெளியானது 'அனிமல்' பட ட்ரைலர்!

ரன்பீர் கபூர் நடிப்பில், உருவாகியுள்ள 'அனிமல்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், ரன்பீர்கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலர்வெளியாகியுள்ளது.

தன்னுடைய அப்பா மீது வெறித்தனமான பாசம் வைத்திருக்கும் ரன்பீர் கபூர் அவருக்காக கொலைகள் செய்யவும் துணிகிறார். மிகவும் வித்தியாசமான கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார். அனில் கபூர், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் திரிப்தி டிம்ரி ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 'அனிமல்' திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video