வரம்புக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது... வீச்சு தான்! தலைவரின் ஆக்ஷன் அதிரடியாக வெளியான 'ஜெயிலர்' ட்ரைலர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்துள்ள... 'ஜெயிலர்' படத்தின் ட்ரைலரை, இன்று வெளியிட உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்த நிலையில், தற்போது 'ஜெயிலர்' ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முத்துவேல் பாண்டியனாக, செம்ம கெத்தாக தலைவர் ஒவ்வொரு பிரேமிலும் மிரட்டி உள்ளார். மேலும் சும்மா இணைய தளமே அதிலும் வகையில் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'ஜெயிலர்' படத்தில் இருந்து வெளியான, அணைத்து பாடல்களுமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்ற நிலையில்... ட்ரைலரும் தாறுமாறாக ரசிக்கப்பட்டு வருகிறது.
ரஜினிக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்கு பின்னர், நடிகை ரம்யா கிருஷ்ணா நடித்துள்ளார். அதை போல் தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கிய இந்த திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க.. சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.