Jailer Second Single Promo: ஹேய் இங்க நான் தான் கிங்... 'Hukum' ப்ரோமோவிலேயே மிரள வைத்த சூப்பர் ஸ்டார்!
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் இருந்து ஹுக்கும் செகண்ட் சிங்கிள் பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடித்துள்ள, 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது சிங்கிள் பாடல் ஜூலை 17 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹேய் இங்க நான் தான் கிங், இங்க நான் வச்சது தான் ரூல்ஸ்! அந்த ரூல்ஸை நான் அப்பப்போ என் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன். அதை கப் சிப்புனு கேட்டு ஃபாலோ பண்ணனும். அத விட்டுடுது ஏதாவது அடாவடி தனம் பண்ண நினைச்ச.... உன்ன கண்டம் துண்டமா வெட்டி கலைச்சி போட்டுடுவேன். ஹுக்கும் டைகர் கா ஹுக்கும் என மிரட்டலாக பேசி இந்த ப்ரோமோவில் துப்பாக்கியை கொண்டு மெர்சல் செய்துள்ளார் ரஜினிக்காந்த்.