கண்ணா இது எப்படி இருக்கு... 'பாபா' படத்தின் புதிய ட்ரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், 2002 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன 'பாபா' திரைப்படம் புதிய பொலிவில், ரீ - ரீலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் புதிய ட்ரெய்லரை நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Share this Video

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, பிளாக்பஸ்டர் ஹிட் படங்களான 'அண்ணாமலை', 'பாட்ஷா' ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா மூன்றாவது முறையாக ரஜினிகாந்தை வைத்து இயக்கி இருந்த திரைப்படம் பாபா. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்தது மட்டுமின்றி, தயாரித்து, கதை மற்றும் திரை கதையும் எழுதி இருந்தார்.

இப்படம் ரஜினியின் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் என்றாலும், இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன்.. தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது புது பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை தற்போது ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே வெளியான இந்த படத்தை தற்போது டிஜிட்டல் மயமாக்கி அதில் உள்ள சில காட்சிகள் மெருகேற்றி புது பொலிவுடன் ரீ- ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் கூட இதற்காக நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் பேசிய சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, மனிஷா கொய்ராலா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் கவுண்டமணி தன்னுடைய டைமிங் காமெடியில் ரசிகர்கள் மனதை கவர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Related Video