அன்பு நண்பனை இழந்திருக்கேன்... மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு! விஜயகாந்த் பற்றி ரஜினி உருக்கம் - வீடியோ இதோ

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் மறைவு குறித்து உருக்கமாக பேசிய வீடியோ இதோ.

Share this Video

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் மறைவு குறித்து மன வருத்தத்துடன் பேசினார். அதன்படி அவர் பேசுகையில், அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. விஜயகாந்த், அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர். எப்படியாச்சும் உடல்நிலை தேறி வந்துவிடுவார்னு எல்லாரும் நினைச்சோம். சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழுவில் அவரை பார்க்கும்போது, எனக்கு நம்பிக்கை கம்மி ஆயிடுச்சு. அவர் நல்ல ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது பண்ணி இருப்பார். அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் இழந்திருக்கிறோம் என ரஜினி கூறினார். அதன் வீடியோவை இந்த தொகுப்பில் பார்க்கலாம்

Related Video