தலைவர் பிறந்தநாள் ட்ரீட்டாக 'கூலி' படத்தில் இருந்து வெளியானது சிக்கிட்டு கிலிம்ஸி வீடியோ!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இன்றைய தினம் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் கிலிம்ஸி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம், லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவரின் 'கூலி' டீசர் அல்லது லிரிகள் பாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று முன்னர் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சிக்கிக்கிட்டு' என்கிற ரஜினிகாந்தின் இன்ட்ரோ பாடலின் கிலிம்ஸி வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள 'கூலி' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.