Jorthaale : ராகவா லாரன்ஸ் நடனத்தில் மிரளவைக்கும் 'ஜோர்தாலே' வீடியோ பாடல் வெளியானது!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த 'ருத்ரன்' படத்தில் இடம்பெற்ற... 'ஜோர்தாலே' பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
 

Share this Video

பிரபல தயாரிப்பாளர், ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் இயக்கி தயாரித்த திரைப்படம் 'ருத்ரன்'. ராகவா லாரன்ஸ் மாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இந்த படத்தில், பிரியா பவானி ஷங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார். 

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம்... பல்வேறு தடைகளை தாண்டி 1500 திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் இப்படம் தொடர்ந்து கலவையான விமர்சனங்ளையே பெற்று வந்தாலும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் தற்போது 'ருத்ரன்' படத்தில் இடம்பெற 'ஜோர்தாலே' பாடலின் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. குழந்தைகளை கவரும் விதத்தில் கலர் ஃபுல் காம்பினேஷனில்... ராகவா லாரன்ஸ் நடனத்தில் பட்டையை கிளம்பியுள்ள இந்த பாடல் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video