என்னமா ஆடுறாருயா மனுஷன்... லாரன்ஸ் மாஸ்டரின் லவ்லி டான்ஸ் உடன் வெளியானது பாடாத பாட்டெல்லாம் பாடல் வீடியோ

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் பாடலின் வீடியோ யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this Video

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசான திரைப்படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் நடிகர் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இப்படத்தின் பாடல்களுக்கு மட்டும் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். பின்னணி இசையை சாம் சி.எஸ்.அமைத்து இருந்தார்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்த பாடல்களுக்கு திரையில் உயிர்கொடுக்கும் வகையில் லாரன்ஸ் அசத்தலாக நடனம் ஆடி இருந்தார். அப்படி அவர் இப்படத்தில் இடம்பெறும் பாடாத பாட்டெல்லாம் என்கிற ரீமிக்ஸ் பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அந்த பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ யூடியூப்பில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

Related Video