தம்பிக்காக களமிறங்கும் ராகவா லாரன்ஸ்; மிரட்டலாக வெளியான Bullet பட கிலிம்ஸ் வீடியோ!

Bullet Movie Glimpse : பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியிருக்கிறார் அவருடைய தம்பி எல்வின்.

First Published Oct 29, 2024, 8:08 PM IST | Last Updated Oct 29, 2024, 8:08 PM IST

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடன இயக்குனராக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கியவர் தான் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் வில்லனாக நடித்து, தற்பொழுது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அவர். அது மட்டுமல்ல அவருடைய இயக்கத்தில் வெளியாகும் பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

குறிப்பாக காஞ்சனா என்ற பெயரில் அவர் எடுத்து வரும் பல திரைப்படங்கள் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு தொடர்ச்சியாக பெற்று வருகிறது. இந்த சூழலில் ராகவா லாரன்ஸின் உடன்பிறந்த தம்பி எல்வின் தற்போது நாயகனாக தமிழ் திரை உலகில் களமிறங்குகிறார். ஏற்கனவே டைரி என்ற படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கும் "புல்லட்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நாயகனாக  நடித்திருக்கிறார். 

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸும் தோன்றியுள்ள நிலையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த சூழலில் இப்படத்தின் கிலிம்ஸ் காட்சி ஒன்று தற்பொழுது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Video Top Stories