Asianet News TamilAsianet News Tamil

லாரன்சுடன் ரொமான்ஸில் புகுந்து விளையாடிய பிரியா பவானி.! 'ருத்ரன்' படத்தின் உன்னோடு வாழும் பாடல் வெளியானது!

'ருத்ரன்' படத்தில் இருந்து ஏற்கனவே இருந்து லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ள நிலையில் மூன்றாவது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 

First Published Apr 1, 2023, 11:01 PM IST | Last Updated Apr 1, 2023, 11:01 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம், ருத்ரன்.  இந்த படத்தை 5 ஸ்டார் கிரியேஷன் நிறுவனர் கதிரேசன் இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் ஏற்கனவே கடந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அவ்வப்போது படம் குறித்த அப்டேட் வெளியிட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வருகிறது படக்குழு. அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற, இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், இதை தொடர்ந்து மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

இதில், இதுவரை எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு... ரொமான்ஸில் புகுந்து விளையாடியுள்ளார் பிரியா பவானி ஷங்கர். உன்னோட வாழ என்கிற பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சித்த ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories