Asianet News TamilAsianet News Tamil

ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானின் ரொமான்ஸ் பாடலாக வெளியான 'பாடாத பாட்டெல்லாம்' லிரிக்கல் வீடியோ!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்' திரைப்படத்திலிருந்து 'பாடாத பாட்டெல்லாம்' என்கிற பழைய படத்தின் பாடல் ரீமேக் செய்யப்பட்டு... வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று வருகிறது.

First Published Feb 11, 2023, 9:19 PM IST | Last Updated Feb 11, 2023, 9:19 PM IST

சமீபகாலமாக என்றும் மனதை விட்டு நீங்காத, இனிமையான பழைய பாடல்கள் ரீமேக் செய்து புது படங்களில் இடம்பெறுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் ஒரு சில பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ள நிலையில்,  தற்போது கடந்த 1962 ஆம் ஆண்டு இயக்குனர் திருலோக சந்தர் இயக்கத்தில் வெளியான 'வீர திருமகன்' படத்தில் இடம்பெற்ற 'பாடாத பாட்டெல்லாம்' என்கிற பாடல் ரீமேக் செய்யப்பட்டு 'ருத்ரன்' படத்தில் இடம்பெற்றுள்ளது.

ராகவா லாரன்ஸின் துள்ளலான ஆட்டம், ப்ரியா பவானியின் ரொமான்டிக் ரியாக்ஷன் இந்த பாடல் காட்சிகளை அழகாக்கியுள்ளதோடு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுத்தந்ததுள்ளது. 'ருத்ரன்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்ட நிலையில் போஸ்ட் ப்ரடெக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விரைவில் ரிலீசாக உள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் க ஜோடியாக, பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்து நடித்துள்ளார்.  இந்த படத்தை 5 ஸ்டார் கிரியேஷன் நிறுவனர் கதிரேசன் இயக்கியுள்ளார். ஏற்கனவே இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆண்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்.. ஒரு சில காரணங்கள் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதை அடுத்து விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழு தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது 'ருத்ரன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'பாடாத பாட்டிலாம்' என்கிற காதல் பாடல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories