ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்... ரொமான்டிக் கானா பாடலாக 'ராயன்' படத்தில் இருந்து வெளியானது வாட்டர் பாக்கெட் பாடல்!

நடிகர் தனுஷின் 50-ஆவது படமான 'ராயன்' படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் லிரிக்கல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published May 24, 2024, 6:41 PM IST | Last Updated May 24, 2024, 6:41 PM IST

தனுஷ் நடித்து இயக்கிய ’ராயன்’ என்ற திரைப்படம் வரும் ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில்,  இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. 

ஏற்கனவே ராயன் படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான 'அடங்காத அசுரன்' பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்... ரொமான்டிக் கானா பாடலாக வாட்டர் பாக்கெட் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சந்தீப் கிஷான் மற்றும் அபர்ணா பாலமுரளிக்காக இருவரும் திகட்டாத வகையில் கொஞ்சி குலாவி ரொமான்ஸ் செய்துள்ளனர். இந்த பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Video Top Stories