Raayan Lyrical Song: மெலடி மழையில் நனைய வைத்த ஏ.ஆர்.ரகுமானின் 'ஓ ராயா' லிரிக்கல் பாடல்!

நடிகர் தனுஷ் நடித்துள்ள 'ராயன்' படத்தில் இருந்து 5-ஆவது லிரிக்கல் பாடல் தற்போது வெளியாகி கேட்பவர்கள் மனதை உருக வைத்துள்ளது.
 

Share this Video

நடிகர் தனுஷ் நடிப்பில், ஜூலை 26-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் 'ராயன்'. தனுஷின் 50-ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை தனுஷே இயக்கி, நடித்துள்ளார். வடசென்னை பகுதியில் நடிக்கும் படி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், தனுஷுக்கு தங்கையாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

மேலும் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், படக்குழு தீவிர புரோமோஷன் பணியில் இறங்கியுள்ளது. அதன்படி ராயன் படத்தில் இடம்பெற்றுள்ள 5-ஆவது சிங்கிள் பாடலான 'ஓ ராயா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் மூலம் ரசிகர்களை மெலடி மழையில் நனைய வைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Related Video