அல்லு அர்ஜுனை வீட்டுக்குள் புகுந்து கைது செய்த போலீஸ் - வீடியோ இதோ

Allu Arjun Arrest Video : புஷ்பா 2 படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் போலீசாரால் கைது செய்யப்பட்டபோது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Dec 13, 2024, 2:40 PM IST | Last Updated Dec 13, 2024, 2:40 PM IST

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து தியேட்டர் நிர்வாகம் மீதும் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், இன்று அல்லு அர்ஜுனை அவரது இல்லத்தில் கைது செய்தனர்.