Leo Audio Launch Cancel | பாதுகாப்பு காரணமா? அரசியல் அழுத்தமா? - மக்கள் கருத்து!
லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து, அரசியல் அழுத்தம் மற்றும் போலி டிக்கெட்டுகள் வினியோகம் என கூறப்பட்டு வந்தாலும், இதனை தயாரிப்பு நிறுவனம் மறுத்ததுள்ளது. ரசிகர்களின் பாதுகாப்பு கருதியே இசை நிகழ்ச்சியை ரத்து செய்ததாக அறிவித்தது. இதுகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கலாம். .
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, இரண்டாவது முறையாக நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். எனவே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உச்சத்தை எட்டி உள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் அடுத்தடுத்து நான்கு 'லியோ' போஸ்டர்களை வெளியிட்டது. மேலும் செப்டம்பர் 30ஆம் தேதி, 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரமாண்ட முறையில் நடைபெற இருந்த நிலையில், இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால் நேற்று இரவு திடீரென, இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்தது. இதற்கு காரணம் அரசியல் அழுத்தம் மற்றும் போலி டிக்கெட்டுகள் வினியோகம் என கூறப்பட்டு வந்தாலும், இதனை தயாரிப்பு நிறுவனம் மறுத்தது. ரசிகர்களின் பாதுகாப்பு கருதியே இசை நிகழ்ச்சியை ரத்து செய்ததாக அறிவித்தது. இதுகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கலாம்.