தேனியில் நடிகர் மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுத பொதுமக்கள்

சென்னையில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனிமாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share this Video

நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலை சென்னையில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, வருசநாடு அருகே பசுமலை தேரி என்ற கிராமத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு உறவினர்கள், ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Video