நான் அவன சும்மா விட மாட்டேன்.....கம்ருதினை எச்சரித்த பிரஜின் ! பரபரப்பு பேட்டி

Share this Video

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதில் ‘டிக்கெட் டூ ஃபினாலி’ டாஸ்க்கின் போது, நடந்த ஒரு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், சான்ட்ராவின் கணவரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான பிரஜின் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். டிக்கெட் டூ ஃபினாலி’ டாஸ்கில் அரோரா வெற்றி பெறுவார் என நினைக்கவில்லை என்றும், சான்ட்ரா வென்றிருக்க வேண்டும் என எண்ணியதாகவும் அவர் தெரிவித்தார். சான்ட்ராவுக்கு நடந்த சம்பவம் குறித்து மன வேதனை தெரிவித்த பிரஜின், “என்னுடைய மனைவியை காரிலிருந்து தள்ளியதைப் பார்த்ததும் கஷ்டமாக இருந்தது. இந்த தகவல் வெளியில் இருந்து தான் எனக்கு கிடைத்தது. பிக்பாஸ் ஒப்பந்தத்தில் இருந்ததால் உடனே பேச முடியவில்லை. நிகழ்ச்சி குழுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, சான்ட்ரா தற்போது நலமாக இருப்பதாக கூறினர்” என்றார்.மேலும், “அங்கு நடந்த சம்பவங்கள் நடந்திருக்கக் கூடாது. என்ன பேச வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது போட்டியாளர்களுக்கு சுய அறிவாக இருக்க வேண்டும். கம்ருதின் மற்றும் பார்வதி தவறு செய்திருந்தால், அவர்களுக்கு உரிய தண்டனை இந்த வாரமே வழங்கப்பட வேண்டும். மீண்டும் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறேன். அப்போது கம்ருதின் உள்ளே இருந்தால் அது அவருக்கு கெட்ட நேரம், இல்லையெனில் நல்ல நேரம். இது ஒரு எச்சரிக்கையாக கூட இருக்கலாம்” என கூறியுள்ளார்.

Related Video