
உன்ன லவ்வரா தான் பாக்க முடியும்; லைப் பாட்னரா இல்ல - பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' ட்ரைலர் வெளியானது!
இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 'டிராகன்' திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
ஓ மை கடவுளே திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் 'டிராகன்'. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயடு லோகர் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
இன்ஜினியரிங் கல்லூரியில் 48 பேப்பரில் அரியர் வைக்கும் பிரதீப் தன்னுடைய காதலுக்காக அதை கிளியர் செய்ய என்ன செய்ய போகிறார் என்பதே இந்த படம். இந்த படத்தில் கெளதம் மேனன், கே எஸ் ரவிக்குமார், இயக்குனர் மிஸ்கின், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.