வந்து கொண்டிருக்கிறேன் அதர்மத்தை சர்வநாசமாக்க... ஸ்ரீ ராமராகவே மாறிய பிரபாஸ்! வெளியானது 'ஆதிபுருஷ்' டீசர்!
பாகுபலி நாயகன் பிரபாஸ் ராமராக நடித்துள்ள, 'ஆதிபுருஷ்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.
'பாகுபலி' படத்தின் வீரம் நிறைந்த அரசனாக நடித்த பிரபாஸ், தற்போது ராமாயண கதையை மையமாக வைத்து எடுப்பட்டுள்ள 'ஆதிபுருஷ்' படத்தில் ராமராக நடித்துள்ளார். பிரபாஸின் 22வது படமாக உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' படத்தை இயக்குனர் ஓம் ராவத் என்பவர் இயக்கியுள்ளார்.
ராமராக நடித்திருக்கும் பிரபாஸுக்கு ஜோடியாகபிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும் சீதையாக நடித்துள்ளார், ராவணனாக பாலிவுட் நடிகர் சைப் அலி கான் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கில் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
இந்நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் அயோத்தியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகியர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த டீசர் இதோ...