watch : சீதை - ராமரின் தெய்வீக காதலை சொல்லும்... ஆதிபுருஷ் படத்தின் ‘ராம் சீதாராம்’ பாடல் வீடியோ இதோ

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆதிபுருஷ், படத்தின் ராம் சீதாராம் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.

First Published May 29, 2023, 3:23 PM IST | Last Updated May 29, 2023, 3:23 PM IST

பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் ராமனாக பிரபாஸும், சீதையாக கீர்த்தி சனோனும் நடித்துள்ளனர். அதேபோல் ராவணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 16-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்றுள்ள ராம் சீதாராம் என்கிற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. ராமர் - சீதை இடையேயான தெய்வீக காதலை உணர்த்தும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.

சச்செத் - பரம்பரா இசையமைத்துள்ள இப்பாடலை கார்த்திக் பாடி இருக்கிறார். இப்பாடல் வரிகளை முரளிதரன் எழுதி இருக்கிறார். தற்போது யூடியூப்பில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

 

Video Top Stories