KGF பாணியில் ஒரு நட்பு..! உன்ன எவனும் தொட கூடாது..! பிரபாஸ் - ப்ரித்விராஜ் அடித்து நோக்கும் 'சலார்' ட்ரைலர்!

நண்பர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள, சலார் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Dec 1, 2023, 7:57 PM IST | Last Updated Dec 1, 2023, 8:05 PM IST

ரெபல் ஸ்டார் பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பின்னர் நடித்த பிக் பட்ஜெட் படங்கள் அனைத்துமே, ஒன்றின் பின் ஒன்றாக தோல்வியடைந்த நிலையில், பிரபாஸ் தற்போது மிகுந்த நம்பிக்கையோடு நடித்துள்ள திரைப்படம் தான் சலார். இப்படத்தை கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். கேஜிஎப் படங்களை தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து உள்ளது.

சலார் படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வருகிற டிசம்பர் 22-ம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படம், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகளும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தன்னுடைய நண்பனுக்காக ஒரு ஆர்மியையே எதிர்க்கும் நண்பனின் கதையாக சிலர் உருவாகி உள்ளது.  பரபரான காட்சிகளுடன் இந்த ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாவதை ட்ரைலரிலேயே படக்குழு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. KGF பாணியிலேயே ஒரு நட்பின் கதையை உருவாக்கியுள்ளார் பிரசாந்த் நீல் என்பதை ட்ரைலரே உணர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Video Top Stories