Asianet News TamilAsianet News Tamil

ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்..! மற்றதெல்லாம் நிலைக்காது.. பவர் ஸ்டார் பரபரப்பு பேச்சு! வீடியோ

சமீபகாலமாக கோலிவுட் திரையுலகில் பற்றி எரியும், சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து குறித்து... நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
 

First Published Mar 21, 2023, 5:39 PM IST | Last Updated Mar 21, 2023, 5:39 PM IST

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது...  பேசுகையில் இன்னும் ஓர் இரண்டு மாதங்களில் தான் நடித்துவரும் படம் முடிந்து விடும் என்றும், ஹீரோயின் கால் சீட்டுஷீட்டுக்காகக்காக காத்திருப்பதாகவும்,  கால்ஷீட் கிடைத்தால் உடனே படபிடிப்பு நடைபெறும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தன்னுடைய உடல்நலம் குறித்து பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், தனக்கு உடல்நிலை சரியில்லை என அவ்வபோது தகவல்கள் வெளியாவது கஷ்டமாகத்தான் உள்ளது. நான் மருத்துவமனையில் இருந்து ஒரே மாதத்திலேயே டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்து விட்டேன். கடந்த ஆறு ஏழு மாதங்களாக தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறேன். தற்போது கூட ஏற்காட்டில் 'அண்டாக்கா கசும்' என்கிற ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருவதாக தெரிவித்தார்.

இது போன்ற செய்திகள் தன்னுடைய கேரியரை  பாதிக்கும் விதமாக உள்ளதாகவும் எனவே தன்னுடைய உடல்நிலை குறித்துபொய்யான தகவல்களை  பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.  இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்க, 'ஒரே புரட்சி தலைவர்... ஒரே  புரட்சித்தலைவி... ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.  இதை தொடர்ந்து யார் வந்தாலும் அந்த பெயர் நிலைக்காது என பேசியுள்ளார். 

Video Top Stories