கொலை பண்றது ஒரு அடிக்ஷன்! பக் பக்... காட்சிகளுடன் வெளியான 'போர் தொழில்' டீசர்!
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும், 'போர் தொழில்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், சார்பில் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தினைத் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
காவலராக அசோக் செல்வன் நடித்துள்ளார். அவரின் உயரதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். இவருவரும் இணைந்து, சீரியல் கில்லர் ஒருவரை பிடிக்க முயற்சிப்பது தான் இந்த படத்தின் கதை என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில், பக் பக் காட்சிகளுடன், உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் ஜூன் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.