'பொன்னியின் செல்வன்' படத்தில் இடமேற்ற தேவராளன் ஆட்டம் லிரிக்கல் வீடியோ இதோ...

பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற, தேவராளன் ஆட்டம் என்கிற வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Share this Video

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகியுள்ளது 'பொன்னியின் செல்வன்' 2 பாடங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்பதையும் இப்போதே அறிவித்துவிட்டது படக்குழு.

படத்தின் மீதான, எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக, தினம் தோறும்... இந்த படத்தின் காட்சிகள் அடங்கிய புரோமோ வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற 'தேவராளன் ஆட்டம்' என்கிற லிரிக்கல் வீடியோ பாடலை படக்குழு வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு, இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடலை யோகி சேகர் பாடியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது. 

Related Video