Asianet News TamilAsianet News Tamil

திரிஷாவின் வேறலெவல் டான்ஸ் உடன்... பொன்னியின் செல்வனில் இருந்து நீக்கப்பட்ட ‘சொல்’ பாடல் வீடியோ வெளியானது

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நீக்கப்பட்ட சொல் என்கிற பாடலின் பிரத்யேக வீடியோ தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

First Published Dec 8, 2022, 11:23 AM IST | Last Updated Dec 8, 2022, 11:23 AM IST

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் உலகமெங்கும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து, இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. அடுத்த ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திலிருந்து நீக்கப்பட்ட சொல் என்கிற பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. குந்தவை திரிஷாவும், வானதி ஷோபிதாவும் அழகு பதுமையுடன் நடனமாடும் காட்சிகளுடன் கூடிய இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு பாடலை தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Video Top Stories