பொன்னியின் செல்வன் 2-வில் இப்படி ஒரு காமெடி காட்சியா? வந்தியத்தேவன் - நம்பி காம்போவின் கலக்கல் வீடியோ இதோ

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெறும் வந்தியத்தேவன் - ஆழ்வார்க்கடியான் நம்பி இடையேயான காமெடி காட்சி யூடியூப்பில் வெளியாகி உள்ளது.

First Published Apr 26, 2023, 6:37 PM IST | Last Updated Apr 26, 2023, 6:37 PM IST

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், தற்போது அப்படத்தில் இருந்து காமெடி காட்சி ஒன்றை ஸ்னீக் பீக் வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் சிறப்பம்சமே அதில் உள்ள கதாபாத்திரங்களின் வடிவமைப்பு தான். அப்படி பொன்னியின் செல்வனில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் வந்தியத்தேவன் - ஆழ்வார்க்கடியான் நம்பி காம்போ மிகவும் பேமஸ் ஆனது. இவர் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி தான் வேறலெவல்.

முதல் பாகத்தில் கார்த்தியும் - ஜெயராமும் அந்த கேரக்டர்களில் எப்படி கலக்கினார்களோ, அதேபோல் இரண்டாம் பாகத்திலும் அதகளம் செய்ய இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக தற்போது வெளியாகி உள்ள ஸ்னீக் பீக் வீடியோ மூலம் தெரிகிறது. 

Video Top Stories