கணிக்க முடியாத கதைக்களம்! வெளியானது 'தருணம்' திரைப்படத்தின் ட்ரெய்லர்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள, தருணம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வணங்கான், காதலிக்க நேரமில்லை, 10 ஹவர்ஸ், உள்ளிட்ட சுமார் ஏழு படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. அதில் ஒன்றுதான் 'தருணம்'.
இளவட்ட ரசிகர்களை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கிஷன் தாஸ் ஹீரோவாகவும் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அரவிந்த் சீனிவாசன் இயக்கியுள்ள இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.