Chevvaikizhamai Teaser: கண்களில் தெரியும் பயம்... 'செவ்வாய்க்கிழமை' படத்தின் டீசர் வெளியானது!

நடிகை பாயல் ராஜ்புட் நடித்துள்ள  'செவ்வாய்கிழமை' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் 'செவ்வாய்கிழமை'. மதுரா மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் சுவாதி ரெட்டி குனுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரிப்பில் உருவாக்கி உள்ள இந்த படத்தில், பாலிவுட் நடிகை பாயல் ராஜ் புட் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நந்திதா ஸ்வேதா, திவ்யா பிள்ளை, விஜய் கிருஷ்ணா, அஜய் கோஸ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்து போஸ் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

திக் திக் காட்சிகளுடன், கண்களுக்கு பயம் தெரியும்படி... சில சஸ்பென்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. செவ்வாய்கிழமை படத்தின் டீசர் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், விரைவில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு அஜினீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள நிலையில், ஷிவேந்திரா தசராந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related Video