வாணி போஜனுடன் கியூட் ரொமான்ஸ்! விக்ரம் பிரபுவின் 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் 2-ஆவது சிங்கிள் பாடல் ரிலீஸ்!

'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தில் இருந்து ஹே பாப்பா என்கிற கியூட் லிரிக்கல், பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
 

First Published Jun 14, 2023, 6:43 PM IST | Last Updated Jun 14, 2023, 6:43 PM IST

நடிகர் விக்ரம் பிரபு சமீப காலமாக, தரமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த 'டாணாக்காரன்' மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, தற்போது இவர் 'பாயும் ஒளி நீ எனக்கு' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் அத்வைத் எழுதி, இயக்கியுள்ளது மட்டுமின்றி தயாரிக்கவும் செய்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, உட்பட அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், இப்படம் திரையரங்குகளில் ஜூன் 23ஆம் தேதி வெளியாகிறது.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜூன் 16ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, நடிகை வாணி போஜன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடித்துள்ளார்.

தற்போது  இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹே பாப்பா' என்கிற இரண்டாவது லிரிக்கல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு சாகர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories