Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்கர் விருது வென்ற 'The Elephant Whisperers' : யானை பராமரிப்பாளர்களான தம்பதியினரை பாராட்டிய விமான பயணிகள்!

கோவை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய சென்ற பொம்மன், பெல்லி தம்பதியர்களை விமானி, விமான பணிப் பெண்கள் மற்றும் ஊழியர்கள், விமான பயணிகள் முன்னிலையில் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்

முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற 'The Elephant Whisperers' ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெல்லி தம்பதியர்கள் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய சென்ற பொம்மன், பெல்லி தம்பதியர்களை விமானி, விமான பணிப் பெண்கள் மற்றும் ஊழியர்கள், விமான பயணிகள் முன்னிலையில் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த செல்போன் வீடியோ தற்பொழுது சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Video Top Stories