ஆன்லைன் மோசடி கும்பல்; நடிகை தமன்னாவிடம் விசாரணை நடந்தும் ED - என்ன நடந்தது?

Actress Tamannaah : ஆன்லைன் மோசடி கும்பல் தொடர்பாக தற்பொழுது அமலாக்கத்துறை, பிரபல நடிகை தமன்னாவிடம் விசாரணை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.

Share this Video

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் தான் தமன்னா. தற்பொழுது தமிழ் திரைப்படங்களை காட்டிலும் இந்தி திரைப்படங்களில் தான் இவர் அதிக அளவில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனியார் விளம்பர நிகழ்ச்சிகளிலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சி சம்பந்தமான மோசடியில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் அளவிலான பணத்தை கொள்ளை அடித்த ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்த நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பிரபல நடிகை தமன்னா பங்கேற்ற நிலையில், இப்போது அமலாக்கத்துறை அவரிடமும் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Video