மரணமற்ற நபரின் ரயில் பயணம்; திகிலூட்டும் ‘ஏழு கடல் ஏழு மலை’ டிரைலர் இதோ

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது.

First Published Jan 21, 2025, 8:53 AM IST | Last Updated Jan 21, 2025, 8:53 AM IST

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம் அடுத்ததாக இயக்கியுள்ள படம் தான் ஏழு கடல் ஏழு மலை. இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மரணமற்ற நபரின் ரயில் பயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலர் வைரலாகிறது.

இப்படத்தில் மரணமற்ற நபராக நிவின் பாலி நடித்திருக்கிறார். அதேபோல் மாயப்பெண்ணாக அஞ்சலி நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் சூரி மேற்கொள்ளும் திகிலூட்டும் ரயில் பயணம் தான் இந்த ஏழு கடல் ஏழு மலை திரைப்படம். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.