கார் டிக்கியயெல்லாம் திறக்க முடியாது.. போலீசிடம் முரண்டு பிடித்த நிவேதா பெத்துராஜ்! பின்னணி இதுவா? வீடியோ

நடிகை நிவேதா பெத்துராஜ் காரை போலீசார் சோதனையிட முயன்றபோது அவர், டிக்கியை திறக்க முடியாது என முரண்டு பிடித்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Video

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். தமிழை விட அம்மணிக்கு தெலுங்கு படங்கள் வரிசை கட்டுவதால், ஐதராபாத்தில் தான் தற்போது நிவேதா பெத்துராஜ்உள்ளார். இந்நிலையில் இவருடைய காரை சோதனை இட வேண்டும் என காவல்துறையினர் அவரிடம் கேட்டு அதர்க்கு அவர் முடியாது என முரண்டு பிடித்து, போலீசார் வீடியோ எடுத்த போது அதனை தள்ளி விடுவது போல் இன்று காலை முதலே ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ உண்மையாக நடந்ததா? அல்லது நிவேதா பெத்துராஜ் நடித்து வரும் படத்தின் புரமோஷனா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். காரணம், அந்த வீடியோவில் போலீஸ் உடை அணிந்திருக்கும் நபர் காலில் செருப்புடன் நிற்பதை நோட் பண்ணிய நெட்டிசன்கள் அதை சுட்டிக்காட்டி இது நிச்சயம் புரமோஷன் தான் என கூறி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ இதோ..

Related Video