Asianet News TamilAsianet News Tamil

தந்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்... மகன் அமீன் மதனை மயக்கும் குரலில் வெளியான 'பத்து தல' புரோமோஷன் பாடல்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'பத்து தல' படாதின் புரோமோஷன் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
 

First Published Mar 13, 2023, 8:11 PM IST | Last Updated Mar 13, 2023, 8:11 PM IST

இயக்குனர் ஒபிலி கே கிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் கேங் ஸ்டாராக நடித்துள்ள திரைப்படம், 'பத்து தல'. கன்னட சூப்பர் ஸ்டார், ஷிவ ராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன முஃப்டி படத்தின், தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் 30 ஆம் தேதி உருவாகியுள்ள இந்த படத்தில், ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது, படக்குழு... இந்த படத்தின் நினைவிருக்கா  என்கிற புரமோஷன் பாடலை வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடலை அவரின் மகன் அமீன் தன்னுடைய இனிமையான குரலில் பாடியுள்ளார். மேலும், அவருடன் சேர்ந்து... சக்திஸ்ரீ கோபாலனும் பாடியுள்ளார். பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன், டிஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள, பத்து தல புரோமோஷன் பாடல்... வெளிநா சில மணி நேரத்திலேயே அதிகப்படியான ஃபாலோவர்சால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.

Video Top Stories