'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தில் இருந்து மனதை வருடும் 'Yedi' காதல் பாடல் வெளியானது!
தனுஷ் இயக்கி உள்ள, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இருந்து 'Yedi' லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. இந்த படத்தில் அனிதா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்க பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தனுஷ் இயக்கி உள்ள இந்த படத்தை, அவருடைய உண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து 'Yedi' என்கிற மனதை வருடும் காதல் பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.