'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் இருந்து வெளியான புள்ள லிரிக்கல் வீடியோ!
நடிகர் தனுஷ் எழுதி இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோவம். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து லிரிக்கல் பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் ஒரு நடிகராக மட்டும் இன்றி, அடுத்தடுத்து சில படங்களை இயக்கவும் துவங்கி உள்ளார். இவர் தற்போது தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து இயக்கி உள்ள திரைப்படம், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. இந்த படத்தில் அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு சிங்கிள் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 'புள்ள' என்கிற மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.