மிக்சர் சாப்பிடுவது நாங்க இல்ல.. நீங்கள் தான்! கள்ளக்குறிச்சி விவகாரம்.. சூர்யாவை வெளுக்கும் நெட்டிசன்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலர் விஷ சாராயம் அருந்தி உயிருக்கு போராடி வரும் நிலையில், இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து மௌனம் காக்கும் சூர்யாவை தான் வெளுத்தி வாங்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
 

Share this Video

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில், இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ள இந்த விவகாரம் குறித்து... எப்போதும், சமூக அக்கறையோடு பேசும் சூர்யா ஏன் இன்னும் வாய்திறக்கவில்லை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

OPS - EPS இடையே தர்மயுத்தம் நடந்த போது, அதனை கிண்டல் செய்யும் விதமாக மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருப்பது நாம் தான் என ஆவேசமாக பேசிய சூர்யா, இவ்வளவு பெரிய விஷயம் நடந்து... சிலர் உயிர்விட்டும், பலர் ஆபத்தான நிலையில் இருக்கும் போது அமைதி காப்பதால் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருப்பது நீங்கள் தான் என பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். 

தளபதி விஜய், விஷால் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள நிலையில் சூர்யா குடும்பமே திமுகவுக்கு பயப்புடுகிறதா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறது. இதற்க்கு பிறகாவது சூர்யா வாய் திறப்பாரா... என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Video