அடடா... அழகில் ஹீரோயின்களை பீட் பண்ணும் நெல்சனின் மனைவி மோனிஷா! வீடியோ

அழகில் ஹீரோயின்களை மிஞ்சும் விதத்தில், நெல்சன் திலீப் குமாரின் மனைவி மோனிஷா இருப்பதாக, இவரின் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கமெண்ட்ஸை குவித்து வருகிறார்கள்.
 

Share this Video

கோலிவுட்டில் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் முன்னனி இயக்குனர் பட்டியலில் இணைந்த இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலீப் குமார். இவர் இயக்கிய, கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற போதிலும், விஜயை இயக்கிய பீஸ்ட் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கவில்லை என்றாலும், விமர்சனம் ரீதியாக தோல்விப்படமாகவே பார்க்கப்பட்டது.

இப்படத்தின் தோல்வியால், பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த இவர், தற்போது அதையெல்லாம் தகர்த்தெறிவது போல், ரஜினியை வைத்து இயக்கிய 'ஜெயிலர்' படத்தை தாறுமாறாக ஹிட்டாகியுள்ளார். இந்த படம் 5 நாட்களில் சுமார் 350 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமாரை தொடர்ந்து, அவரின் மனைவி... மோனிஷாவும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் ஹீரோயின்களை மிஞ்சிய அழகில் வெளியிடும் புகைப்படங்கள் தான் இதற்க்கு காரணம். பளீச் அழகில் ஜொலிக்கும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

Related Video