Asianet News TamilAsianet News Tamil

அங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் உன் உயிருக்கு தான் ஆபத்து..! திக் திக் காட்சிகளுடன் வெளியான 'கனெக்ட்' ட்ரைலர்!

நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
 

First Published Dec 9, 2022, 12:30 AM IST | Last Updated Dec 9, 2022, 12:30 AM IST

நடிகை நயன்தாரா மாயா பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடித்துள்ள 'கனெக்ட்' திரைப்படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியானது. 

இந்த படத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்,  பாலிவுட் நடிகர் அனுபம் கேர் போன்ற பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை நயன்தாராவின் கணவரும்,இயக்குனருமான விக்னேஷ் சிவன், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஹாரர் மற்றும் திரில்லர் கதை அம்சத்தில் உருவாகி உள்ள படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியானது. திக் திக் நிமிடங்களுடன் நடைபெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ள.  நயன்தாராவின் மகள் ஒரு அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக்கொள்ள அவரை அதில் இருந்து எப்படி மீட்கிறார் நயன்தாரா என்பதை பரபரப்பான காட்சிகளுடன் காட்டியுள்ளார் இயக்குனர். இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories