Nayanthara: நொடிக்கு நொடி திரில்... மிரள வைக்கும் நயன்தாராவின் 'கனெக்ட்' டீசர்..! ரிலீஸ் தேதியுடன் வெளியானது!

நடிகை நயன்தாரா நடித்துள்ள 'கன்னெட்' படத்தின் டீசர் இன்று, அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
 

Share this Video

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் தன்னுடைய சொந்த நிறுவனமான ரவுடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில், நடித்து வரும் 'கனெக்ட்' படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

அந்த வகையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஹாரர் ஜர்னரில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை, நடிகை நயன்தாராவை வைத்து ஏற்கனவே 'மாயா' படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார். சத்யராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் அனுப்பம் கேர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நயன்தாரா நடித்துள்ள ஹாரர் படமான, இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 95 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் ஓடும் படமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இடைவேளை இல்லாமல் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் போன்றவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Video