
சிம்பு பிறந்தநாளில் நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் ட்ரீட் - வைரலாகும் டெஸ்ட் டீசர்
நடிகர் சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா, மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் டெஸ்ட். இப்படத்தை சசிகாந்த் இயக்கி உள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. இப்படத்தில் நடிகர் சித்தார்த்தும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ள நிலையில், சிம்பு பிறந்தநாளான பிப்ரவரி 3ந் தேதி அப்படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளனர்.
டெஸ்ட் திரைப்படத்தை சசிகாந்த் தான் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் மூலம் பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து டெஸ்ட் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதற்கு முன்னர் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், ஓ2, நெற்றிக்கண் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில், அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக டெஸ்ட் திரைப்படமும் இணைந்துள்ளது.