விக்கி - நயன் திருமண வீடியோ! வெளியானது ட்ரைலர்!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண டாகுமெண்டரி வீடியோ வரும் 18-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது அதன் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
 

First Published Nov 9, 2024, 1:43 PM IST | Last Updated Nov 9, 2024, 1:43 PM IST

நடிகை நயன்தாராவுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், இவர்களின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் நயன்தாராவின் திருமண டாகுமெண்டரி வீடியோ... நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 19-ஆம் தேதி Nayanthara: Beyond the Fairy Tale என்கிற பெயரில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த டாகுமெண்டரியின் ட்ரைலரை தற்போது நெட்பிலிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் கன்னட நடிகர் உப்பேந்திரா, ராணா, ராதிகா, நெல்சன் திலீப் குமார் உள்ளிட்ட பலர் விக்கி - நயன் ஜோடி பற்றி கூறியுள்ளனர். அதே போல் கெளதம் மேனன் நயன்தாராவிடம் கேள்வி எழுபது தெரிகிறது. இந்த ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது.
 

Video Top Stories