ஊழியர்களுக்கு பரிசு பொருட்கள்; மகன்கள் மற்றும் கணவரோடு விஜயதசமியை கொண்டாடிய நயன்தாரா! Video!

Nayanthara Vignesh Shivan : பிரபல நடிகை நயன்தாரா தனது கணவர் இயக்குனர் விக்னேஷுடன் இணைந்து விஜயதசமி விழாவை கொண்டாடியுள்ளார்.

First Published Oct 12, 2024, 9:28 PM IST | Last Updated Oct 12, 2024, 9:28 PM IST

கடந்த 2015ம் ஆண்டு வெளியான "நானும் ரவுடி தான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் காதல் பயணத்தை தொடங்கிய நட்சத்திர ஜோடிகள் தான் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு இருவரும் கடந்த 2022ம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் "காத்து வாக்குல இரண்டு காதல்" என்கிற திரைப்படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றினர். இந்த சூழலில் " காத்து வாக்குல ரெண்டு காதல்" திரைப்படம் வெளியான இரண்டு மாதங்கள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

திருமணமான அடுத்த ஆண்டு அவர்களுக்கு வாடகை தாய் மூலம் உயிர் மற்றும் உலகு என்று இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். பிஸியாக இருக்கும் அதே நேரம் தனது குடும்பத்திற்காகவும் அதிக நேரத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று விஜயதசமி திருநாளை முன்னிட்டு, தங்கள் வீட்டில் பணி செய்யும் பணியாளர்களுக்கு பரிசு வழங்கி அவர்களோடு இந்த நன்னாளை கொண்டாடி இருக்கின்றனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

Video Top Stories