மோசமான சைக்கோ பேத்..! நெஞ்சை பதற வைக்கும் நயன்தாராவின் 'இறைவன்' பட 'ஸ்னீக் பீக்' !

நயன்தாரா - ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'இறைவன்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெறியாகி பார்ப்பவர்கள் நெஞ்சை பதவிக்க வைத்துள்ளது.
 

Share this Video

இயக்குனர் ஐ.அஹமத் இயக்கத்தில், ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்து நடித்துள்ள 'இறைவன்' திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை படக்குழு தற்போது வெளியிட, பார்ப்பவர்கள் நெஞ்சங்களே பதைபதைக்க வைத்துள்ளது.

இப்படம் போர் தொழில் , ராட்சசன், படங்களின் வரிசையில்... மோசமான சைக்கோ பேத் பற்றிய கதைக்களத்தில் உருவாக்கியுள்ளது. தன்னை கடவுளாக நினைத்து கொண்டு, தன்னுடைய சந்தோஷத்திற்காக பல பெண்களை கொலை செய்யும், கொலைகாரன் பற்றிய இந்த படத்தின் விறுவிறுப்பான காட்சிகள் தற்போது வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இதோ..

Related Video