Annapoorani: நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் இருந்து வெளியான 'உலகை வெல்ல போகிறாள்' ஃபஸ்ட் சிங்கிள் பாடல்!

இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி' படத்தில் இடம்பெற்றுள்ள, முதல் சிங்கிள் பாடலின் வீடியோ தற்போது வெளியானது. 
 

First Published Nov 18, 2023, 8:21 PM IST | Last Updated Nov 18, 2023, 8:21 PM IST

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி- The Goddess of Food’ திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில், இடம்பற்றுள்ள 'உலகை வெல்ல போகிறேன்' என்கிற முதல் சிங்கிள் பாடலை படக்குழு, நயன்தாராவின் பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளது.

நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை, ஜீ ஸ்டுடியோஸ், மற்றும் நாட் ஸ்டுடியோஸ் டிரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். விவேக் பாடல் வரிகள் எழுதியுள்ள நிலையில்... இந்த பாடலை, ஹரிணி பாடியுள்ளார். சிறு வயதில் இருந்தே சமையலை பார்த்து வளரும் ஒரு குழந்தை, சமையல் மூலம் சாதிக்க துடிப்பதை இந்த பாடல் காட்டுகிறது.

Video Top Stories