நடிகை நயன்தாரா அரசியல்வாதியாக மாறியது எப்படி... காட்ஃபாதர் படக்குழு வெளியிட்ட லேடி சூப்பர்ஸ்டாரின் மாஸ் வீடியோ

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி உள்ள காட்ஃபாதர் படத்தில் நடிகை நயன்தாரா அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

Share this Video

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, தற்போது காட்ஃபாதர் படத்தில் நடித்துள்ளார். மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். இது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

இப்படத்தில் நடிகை நயன்தாரா, அரசியல்வாதியாக நடித்துள்ளார். காட்ஃபாதர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற அக்டோபர் 5-ந் தேடி இப்படம் ரிலீசாக உள்ளது. இதனிடையே இப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள சத்ய பிரியா ஜெயதேவ் என்கிற கதாபாத்திரம் உருவான விதம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Related Video