என்ன ஆனாலும் சரி பாத்துக்கலாம்.. அடிதடியில் மரண மாஸ் காட்டும் நானியின் 'தசரா' பட ட்ரைலர் வெளியானது!

நடிகர் நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'தசரா' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

நடிகர் நானி இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில்... தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஆகிய 5 மொழிகளில் நடித்து பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது 'தசரா'. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம், மார்ச் 30 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கீர்த்தி சுரேஷ் துளியும் மேக்கப் இன்றி... புத்தம் புது அழகில் ஜொலிக்கிறார். ட்ரைலரை வைத்து பார்க்கையில் இப்படத்தில் நானியின் அடிதடிக்கு குறைவிருக்காது என்பது தெரிகிறது. நிலக்கரி தொழிலாளர்கள் பற்றிய வாழ்க்கையையும், அவர்களுக்கும் நடக்கும் முக்கிய பிரச்சனைகளும், அடிப்படையாக வைத்தே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்பத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் நவீன் நூலி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ளார் என்பது குறிபிடித்தக்கது.

Related Video